/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
நகை கடையில் ஒத்திகை பார்த்து கொள்ளையடித்த இருவர் கைது
/
நகை கடையில் ஒத்திகை பார்த்து கொள்ளையடித்த இருவர் கைது
நகை கடையில் ஒத்திகை பார்த்து கொள்ளையடித்த இருவர் கைது
நகை கடையில் ஒத்திகை பார்த்து கொள்ளையடித்த இருவர் கைது
ADDED : ஆக 03, 2025 02:45 AM
ஆரணி:ஆரணி நகை கடையில் ஒத்திகை பார்த்து, 15 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, இ.பி., நகரில் பெருமாள், 37, என்பவர் ஜூவல்லரி நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 26 காலை, வழக்கம் போல கடையை திறந்து உள்ளே சென்ற போது, வெள்ளி நகைகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, கடை மேற்கூரையை உடைத்த கொள்ளையர், தங்க நகை வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முடியாததால், 15 கிலோ வெள்ளி பொருட்களை மட்டும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
ஆந்திர மாநிலம், சித்துாரை சேர்ந்த சரவணன், 32, பிரபு, 42, சிரஞ்சீவி, 34, தினேஷ், 30, ஆகிய நான்கு பேர் இரு மாதங்களுக்கு முன் ஆரணி வந்து, ஜூவல்லரியை நோட்டமிட்டும், ஒரு மாதத்திற்கு முன்பு கடை மீது ஏறி ஒத்திகை பார்த்ததும் ஆரணி தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, சரவணன், பிரபு, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 4 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு வழக்கில், சித்துார் நீதிமன்றத்தில் சிரஞ்சீவி, தினேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

