/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
உயர்நீதிமன்ற வக்கீலை தாக்கிய 4 போலீசார் பணியிட மாற்றம்
/
உயர்நீதிமன்ற வக்கீலை தாக்கிய 4 போலீசார் பணியிட மாற்றம்
உயர்நீதிமன்ற வக்கீலை தாக்கிய 4 போலீசார் பணியிட மாற்றம்
உயர்நீதிமன்ற வக்கீலை தாக்கிய 4 போலீசார் பணியிட மாற்றம்
ADDED : மே 17, 2024 12:55 AM
வந்தவாசி:வந்தவாசி அருகே, வக்கீலை தாக்கிய, 4 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சேதாரகுப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன், 25; சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக உள்ளார். கடந்த, 12 ல் வந்தவாசி தெற்கு போலீஸ் எஸ்.ஐ., ராமு மற்றும் போலீசார், வந்தவாசி தேரடியில் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக, செம்பூரை சேர்ந்த மணிகண்டன், 21, என்பவர், 3 பேருடன் பைக்கில் சென்றார். அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அங்கு சென்ற வக்கீல் பாலமுருகன், மணிகண்டனுக்கு ஆதரவாக எஸ்.ஐ., ராமுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆபாசமாக பேசி, போலீசாரின் சட்டையை பிடித்து இழுத்தார். வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து, வக்கீல் பாலமுருகனை கடந்த, 2 நாட்களுக்கு முன் கைது செய்தனர். அப்போது அவரை போலீசார் தாக்கினர். இது குறித்த வீடியோ வைரலானது.
இதையடுத்து, வந்தவாசி தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும், எஸ்.ஐ., ராமு, மற்றும் போலீஸ்காரர் எல்லப்பன், ராமதாஸ், செந்தில்குமார், ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

