/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
சிறுமியிடம் சில்மிஷம்முதியவருக்கு5 ஆண்டு சிறை
/
சிறுமியிடம் சில்மிஷம்முதியவருக்கு5 ஆண்டு சிறை
ADDED : ஏப் 10, 2025 01:08 AM
சிறுமியிடம் சில்மிஷம்முதியவருக்கு5 ஆண்டு சிறை
திருவண்ணாமலை:சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூரை சேர்ந்தவர் ஏழுமலை, 75. கூலித்தொழிலாளி. கடந்த, 2020 மார்ச், 29ல் தெருவில் விளையாடிய, 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் சில்மிஷம் செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். வந்தவாசி அனைத்து மகளிர் போலீசார், ஏழுமலையை போக்சோவில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, முதியவர் ஏழுமலைக்கு, 5 ஆண்டு சிறை மற்றும், 10,000 ரூபாய் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ஒரு லட்சம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.