/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
உணவு அளிக்காத மகன்கள் 90 வயது மூதாட்டி தற்கொலை
/
உணவு அளிக்காத மகன்கள் 90 வயது மூதாட்டி தற்கொலை
ADDED : ஜூன் 19, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டராம்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பெருங்குளத்துார் ஊராட்சியைச் சேர்ந்தவர் முத்தம்மாள், 90. இவரது கணவர் பரசுராமன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது, மூன்று மகன்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக உள்ளனர்.
முத்தம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசிக்கிறார். அவரை யாரும் கவனிக்காமலும், உணவு கொடுக்காமலும் இருந்ததால், விரக்தியில் நேற்று முன்தினம், விஷச்செடியை அரைத்துக் குடித்து, மயங்கிக் கிடந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு, பெருங்குளத்துாரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.
தானிப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.