/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தீர்த்தவாரி உற்சவம்
/
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தீர்த்தவாரி உற்சவம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தீர்த்தவாரி உற்சவம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தீர்த்தவாரி உற்சவம்
ADDED : ஆக 07, 2024 08:14 PM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர விழாவில், தீர்த்தவாரி உற்சவம் மற்றும் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த, 29ம் தேதி, அம்மன் சன்னதி முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழாவில் தினமும் காலை, மாலையில் விநாயகர் பராசக்தி அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று ஆடிப்பூர தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்டு மாடவீதியில், சுவாமி வலம் சென்று, கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைக்கு பின், சூல ரூபமான பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்களை முழங்க, மங்கள வாத்தியங்களுடன் சூலத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமியிடம் இருந்து சூலத்தை பெற்று, அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், வளைகாப்பு உற்சவமும் நடந்தது. நேற்றிரவு கோவில், 2ம் பிரகாரத்தில் தீமிதி விழாவுடன் உற்சவம் நிறைவு பெற்றது.