/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ஆவின் பாலகம் தீ வைத்து எரிப்பு
/
ஆவின் பாலகம் தீ வைத்து எரிப்பு
ADDED : ஜூலை 31, 2024 01:26 AM
கலசப்பாக்கம்:கலசப்பாக்கம் அருகே, ஆவின் பாலகத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே, கடந்த, 3 ஆண்டுகளாக ஜெயமோகன், 35, என்பவர், ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் கடையை மூடி விட்டு சென்றார். அன்றிரவு, 11:00 மணியளவில், அவரது பாலகத்திலிருந்து புகை வருவதை கண்டு, அருகில் இருந்தவர்கள் தகவலின் படி, கலசப்பாக்கம் தீயணைப்புத் துறையினர் வந்தனர். அதற்குள், ஆவின் பாலகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. அதன்பின் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தி, மேலும் பரவாமல் அணைத்தனர். கடலாடி போலீசார் விசாரணையில், ஆவின் பாலகம் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது தெரியவந்தது. தீ வைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.