/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
நாட்டு வெடிகுண்டு வெடித்து துண்டான சிறுவன் விரல்கள்
/
நாட்டு வெடிகுண்டு வெடித்து துண்டான சிறுவன் விரல்கள்
நாட்டு வெடிகுண்டு வெடித்து துண்டான சிறுவன் விரல்கள்
நாட்டு வெடிகுண்டு வெடித்து துண்டான சிறுவன் விரல்கள்
ADDED : பிப் 27, 2025 02:37 AM
செங்கம்:செங்கம் அருகே, நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், சிறுவனின் கை விரல்கள் துண்டாகின.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புளியம்பட்டியை சேர்ந்தவர் முருகன், 55, விவசாயி. இவரது மகன் சபரிநாதன், 14. அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 23ம் தேதி பள்ளி விடுமுறை என்பதால், அருகே தம்புநாயக்கன்பட்டியிலுள்ள உறவினரான முருகன், 45, என்பவரது வீட்டிற்கு சென்று விளையாடினார்.
அப்போது, முருகன் வீட்டின் மாடியில் நாட்டு வெடிகுண்டுகள் உலர்த்தி வைத்திருந்ததை பார்த்த சிறுவன் சபரிநாதன், அதிலிருந்து ஒன்றை எடுத்தார். அப்போது, நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், சிறுவனின் வலது கையில், 3 விரல்கள் துண்டானது. செங்கம் போலீசார் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்து. நாட்டு வெடிகுண்டுகள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என, விசாரித்து வருகின்றனர்.

