/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
விபத்து ஏற்படுத்தியதாக பலியானவர் மீதே வழக்கு: உறவினர்கள் மறியல்
/
விபத்து ஏற்படுத்தியதாக பலியானவர் மீதே வழக்கு: உறவினர்கள் மறியல்
விபத்து ஏற்படுத்தியதாக பலியானவர் மீதே வழக்கு: உறவினர்கள் மறியல்
விபத்து ஏற்படுத்தியதாக பலியானவர் மீதே வழக்கு: உறவினர்கள் மறியல்
ADDED : மே 30, 2024 08:47 PM
தண்டராம்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அல்லி, 32; வெளிநாட்டில் பணியாற்றி வந்தவர், விடுமுறையில் ஊருக்கு வந்தார்.
அவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் அல்லி, தன் அப்பாச்சி பைக்கில், தண்டராம்பட்டு சென்று விட்டு மீண்டும் மதியம், 3:00 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது, எதிர்மேடு என்ற இடத்தின் அருகே, அல்லியின் பைக்கும், தண்டராம்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் தனிப்பிரிவு தலைமை காவலர் வெங்கடேசன் ஓட்டி வந்த 'ஹோண்டா ஸ்பிளண்டர்' பைக்கும், நேருக்கு நேர் மோதின. இதில், படுகாயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு, தண்ரடாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அல்லி உயிரிழந்தார். தண்டராம்பட்டு போலீசார் விபத்து ஏற்படுத்தியதாக, அல்லி மீது வழக்கு பதிந்தனர்.
இதையறிந்த அல்லியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், நேற்று ராதாபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். தண்டராம்பட்டு டி.எஸ்.பி., முருகன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.