/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
115 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
/
115 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
ADDED : மே 29, 2024 08:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த காட்டுமலையனுார் கிராமத்தில் அனுமதியின்றி வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, குற்ற நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் நேற்று சோதனை நடத்தியதில், காட்டு மலையனுார் ஏரிக்கரையில் டிராக்டரில் பதுக்கிய, 27 டெட்டனேட்டர், மற்றும் 115 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், வெடிபொருட்களை வைத்திருப்பதற்கான எந்த அனுமதியும், ஆவணங்களும் இல்லை என தெரிந்தது. இது தொடர்பாக வேட்டவலம் போலீசார் வழக்கு பதிந்து, கீழ்பென்னாத்துார் அடுத்த பொன்னான்குளம் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன், 30, என்பவரை கைது செய்தனர்.