/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
குளிர்பானம் குடித்ததில் சிறுமி பலி நிறுவனம் மறுப்பு;போலீசில் புகார்
/
குளிர்பானம் குடித்ததில் சிறுமி பலி நிறுவனம் மறுப்பு;போலீசில் புகார்
குளிர்பானம் குடித்ததில் சிறுமி பலி நிறுவனம் மறுப்பு;போலீசில் புகார்
குளிர்பானம் குடித்ததில் சிறுமி பலி நிறுவனம் மறுப்பு;போலீசில் புகார்
ADDED : செப் 10, 2024 07:52 PM
செய்யாறு:'டெய்லி பிரஸ் ப்ரூட் இந்தியா' என்ற நிறுவனத்தின் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழக்கவில்லை என கூறியுள்ள நிறுவனம், சிறுமியின் தந்தை, தங்களது நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் மகள் காவியாஸ்ரீ, 6. கடந்த ஆக., 10ம் தேதி வீட்டருகே பெட்டிக்கடையில், 10 ரூபாய் கொடுத்து, டெய்லி பிரஸ் நிறுவன மாம்பழ குளிர்பானத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி இறந்தார். ராஜ்குமார் புகார் படி, துாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் பகுதியை சேர்ந்த, 'டெய்லி பிரஸ் ப்ரூட் இந்தியா' என்ற நிறுவனத்தின் துணை மேலாளர் தயாளன் மற்றும் நிறுவன வழக்கறிஞர் கார்த்திகேயன், துாசி போலீசில் நேற்று புகாரளித்தனர்.
அதில், ராஜ்குமார் மகள் காவியாஸ்ரீ, டெய்லி பிரஸ் மேங்கோ குளிர்பானத்தை குடித்து உயிரிழக்கவில்லை. எங்கள் குளிர்பானம் குடிக்கத்தக்க தரமானது. இதுகுறித்து மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, நேஷன் புட் லேபரட்டரி உள்ளிட்ட மூன்று லேப்களில் பரிசோதனை செய்ததில் உறுதி செய்யப்பட்டு சான்று வழங்கியுள்ளது.
எங்கள் நிறுவனத்தின் குளிர்பானம் குடித்து தான் உயிரிழந்ததாக கூறியதால், எங்களது விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பணம் கேட்டு, மிரட்டல் விடுத்து வருகின்றனர். நிறுவனத்தின் பெயரை, ராஜ்குமார் தவறாக கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

