ADDED : மே 08, 2024 01:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:திருவண்ணாமலை சாலைகளில், போக்குவரத்து சிக்னலில், வாகன ஓட்டிகள் பல நிமிடங்கள் காத்திருக்க நேரிடுகிறது. இதை தவிர்க்கும் வகையில் முதற்கட்டமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் ஸ்டாண்ட், போக்குவரத்து சிக்னல் பகுதிகளில், மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், பசுமை நிழல் வலை பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள சிக்னலில், நேற்று பந்தல் அமைக்கப்பட்டது. இது, 20 அடி அகலம், 100 அடி நீளம் வரை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 10 இடங்களிலும், அடுத்தடுத்து, 30 இடங்களிலும் அமைக்கப்படவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

