/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
சிறுமியை பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமியை பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஆக 07, 2024 01:05 AM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே, 4 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட, கூலி தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த கீக்களூர் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஜெயபால், 44; இவர் கடந்த, 2020 மே, 4ம் தேதி, 4 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். கீழ்பென்னாத்துார் போலீசார் போக்சோவில் ஜெயபாலை கைது செய்தனர்.
இந்த வழக்கு, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, நேற்று முன்தினம் மாலை, தொழிலாளி ஜெயபாலுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.