/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
விபத்தில் தப்பிய அமைச்சரின் மகன்
/
விபத்தில் தப்பிய அமைச்சரின் மகன்
ADDED : மே 13, 2024 07:39 AM
திருவண்ணாமலை : அமைச்சர் வேலுவின் மகன், கார் விபத்தில் லேசான காயத்துடன் தப்பினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலுவின் மகன் கம்பன்; தி.மு.க., மாநில மருத்துவ அணி துணை தலைவராக உள்ளார். சாரோன் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்திலிருந்து, மதிய உணவுக்காக வீட்டுக்கு, பார்ச்சூனர் காரில் நேற்று மதியம் சென்றார். ரிங் ரோட்டில் சென்றபோது விழுப்புரம்- தி.மலை சந்திப்பு சாலை அருகே, ஹூண்டாய் அமேஸ் கார் மோதியது. இதில் கம்பன் சென்ற கார் கவிழ்ந்தது.
லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். விபத்து குறித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய காரில் இருந்தவர்கள், லேசான காயத்துடன் மருத்துவமனையில் சேர சென்றதால், விபரம் தெரியவில்லை என்றும், அவர்களை தேடி வருவதாகவும், போலீசார் தெரிவித்தனர்.