/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 06, 2024 11:38 PM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை சேர்ந்த டீக்கடை தொழிலாளி குப்புசாமி, 67, கடந்த 2020 பிப்., 13ல், அதே பகுதியை சேர்ந்த, 5 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக அழைத்து சென்று, குப்புசாமி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
சிறுமி கூச்சலிட்டதால் குப்புசாமி தப்பினார். திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, குப்புசாமியை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு, திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி பார்த்தசாரதி நேற்று முன்தினம் குப்புசாமிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
l ஆரணி, பழங்காமூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஹரிகரன், 24, அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியிடம், 2022 ஜூலை, 13ம் தேதி ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். ஆரணி டவுன் போலீசார், ஹரிகரனை போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதிபதி பார்த்தசாரதி வழக்கை விசாரித்து, ஹரிகரனுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.