/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
'ஒற்றை கொம்பன்' அட்டகாசம் கிராம மக்கள் அலறி ஓட்டம்
/
'ஒற்றை கொம்பன்' அட்டகாசம் கிராம மக்கள் அலறி ஓட்டம்
'ஒற்றை கொம்பன்' அட்டகாசம் கிராம மக்கள் அலறி ஓட்டம்
'ஒற்றை கொம்பன்' அட்டகாசம் கிராம மக்கள் அலறி ஓட்டம்
ADDED : செப் 08, 2024 02:38 AM
திருவண்ணாமலை:ஆந்திர வனப்பகுதியிலிருந்து, 15 ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலைக்கு இடம் பெயர்ந்த யானை கூட்டத்தில், ஒற்றை கொம்பன் யானை தனியாக பிரிந்து சுற்றித்திரிகிறது. இதுவரை மக்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில், ஆலங்காயம் வனச்சரகம், வசந்தபுரம் கிராமம் அருகே சுற்றித்திரிந்தது.
பள்ளி மாணவர், 20 பேர், அவர்களின் பெற்றோர், 5 பேர் என ஒரு வேனில், ஜவ்வாதுமலை ஜமுனாமரத்துாரிலிருந்து வசந்தபுரம் மற்றும் நீலகிரி தோப்பு கிராமத்துக்கு சென்றனர்.
அங்கு சுற்றித்திரிந்த ஒற்றை கொம்பன் வேனை மடக்கியது. அதிர்ச்சியடைந்த டிரைவர், அனைவரையும் பாதுகாப்பாக இறக்கி, இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
வேனை கவிழ்த்த யானை, அதில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களை தின்றது. பின், கிராமத்தில் வீடுகள் முன் நிறுத்தப்பட்டிருந்த, நான்கு பைக்குகளை துாக்கி வீசி பந்தாடியது.
அங்குள்ள சிவன் கோவிலில் பெரிய தொட்டியில் தண்ணீர் குடித்து விட்டு வனப்பகுதிக்கு சென்றது. ஆலங்காயம் வனச்சரகர் சேகர் தலைமையிலான வனத்துறையினர் யானையை கண்காணித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பீமகுளம் கிராம பகுதியில், யானை நேற்று நடமாடியது தெரிய வந்தது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று ஆலங்காயம் அருகே தீர்த்தம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு, ஒற்றை கொம்பன் யானை செல்வது வழக்கம்.
சதுர்த்தி தினமான நேற்று, கோவிலுக்கு செல்லாததுடன், ஆக்ரோஷமாக மாறியுள்ளது கிராம மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.