/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.73,000 பறிமுதல்
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.73,000 பறிமுதல்
ADDED : ஆக 03, 2024 12:29 AM
செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளராக பல்வீன் பணிபரிந்து வருகிறார். இந்நிலையில், அந்த அலுவலகத்தில், பத்திரபதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், முறைகேடாக பத்திரபதிவு நடைபெறுவதாகவும் வந்த புகாரின் படி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார், சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, அலுவலகத்தின் கதவை மூடி, அங்கிருந்த ஊழியர்கள், பத்திரபதிவு எழுத்தர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, கணக்கில் வராத, 73,190 ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முக்கிய ஆணவங்களை பறிமுதல் செய்துள்ளனர்.