/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலையில் போதைப்பொருள் 'சப்ளை' ரஷ்ய பெண் உட்பட இருவர் கைது
/
தி.மலையில் போதைப்பொருள் 'சப்ளை' ரஷ்ய பெண் உட்பட இருவர் கைது
தி.மலையில் போதைப்பொருள் 'சப்ளை' ரஷ்ய பெண் உட்பட இருவர் கைது
தி.மலையில் போதைப்பொருள் 'சப்ளை' ரஷ்ய பெண் உட்பட இருவர் கைது
ADDED : ஜூன் 14, 2024 02:36 AM

சென்னை:திருவண்ணாமலையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, போதைப்பொருள் வினியோகம் செய்யவிருந்த, ரஷ்யாவைச் சேர்ந்த இருவரை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் நாளை முதல் 17ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில், வெளிநாடுகளைச் சேர்ந்தோர் பங்கேற்க உள்ளனர்.
அவர்களுக்கு போதைப்பொருள் வினியோகம் செய்ய இருப்பதாக, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, தனிப்படை அதிகாரிகள் திருவண்ணாமலையில் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில், ரஷ்யாவைச் சேர்ந்த, 42 வயது ஆண்; 36 வயது பெண் ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
தீவிர விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, அமனிடா மஸ்காரியா, மேஜிக் மஸ்ரூம் என்ற போதை காளான், பதப்படுத்தப்பட்ட அயாஹுஸ்கா தாவரப்பொடி, 'கம்போ' என்ற பச்சை மரத்தவளையில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை மருத்துவ குணம் உடையது, ஆண்மைக் குறைவை போக்கும் என, வினியோகம் செய்ய இருந்தது தெரியவந்தது.
இதற்கு முன், உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்ச்சியில், இவர்கள் போதைப்பொருள் வினியோகம் செய்ததும் தெரியவந்தது.
இருவரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 239 கிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.