/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
வேகத்தடையில் விழுந்து பெண் பலி
/
வேகத்தடையில் விழுந்து பெண் பலி
ADDED : ஆக 24, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: கணவருடன் பைக்கில் சென்ற மனைவி, வேகத்தடையில் விழுந்து இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை சேர்ந்தவர் அபுபக்கர், 55; ேஹாட்டல் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி ஷமீம், 55; இவரும் நேற்று மாலை பைக்கில் நெய்வேலியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தனர். பெரியசெவலை அடுத்த மாதம்பட்டு கிராமத்தில் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது, ஷமீம் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அதில் தலையில் படுகாயமடைந்த ஷமீம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

