/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ரூ.20 லட்சம் காய்கறிகள் லாரியிலேயே நிறுத்திவைப்பு

ADDED : மே 15, 2024 08:45 PM
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், கூலி மற்றும் மாமூலை உயர்த்தி தரக்கோரி மூட்டை துாக்கும் தொழிலாளர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் லாரியிலிருந்து இறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை, மணலுார்பேட்டை சாலையில், கீழ்அணைக்கரை பகுதியிலுள்ள ரிங்ரோட்டில் மொத்த காய்கறி மற்றும் வெங்காய மண்டிகள், 3 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.
இங்கு பெங்களூரு, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வெங்காயம், பூண்டு மற்றும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு மொத்த வியாபாரம் செய்யப்படுகிறது.
லாரிகளில் கொண்டு வரப்படும் காய்கறி மூட்டைகளை இறக்க, கடை உரிமையாளர்கள் மூட்டை துாக்கும் தொழிலாளர்களுக்கு, 3 ஆண்டுகளாக, கூலியாக ஒரு டன்னுக்கு 150 ரூபாய், மாமூல் 50 ரூபாய் என, வழங்கி வருகின்றனர்.
தற்போது, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால், மூட்டை துாக்கும் தொழிலாளர்கள், கூலியாக ஒரு டன்னுக்கு 200 ரூபாய், மாமூல் 100 ரூபாய் என உயர்த்தி தரக்கோரி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், 20 லட்சம் மதிப்பிலான வெங்காயம், பூண்டு மற்றும் காய்கறிகள் லாரியிலிருந்து இறக்கப்படாமல் உள்ளன. காய்கறிகள் அழுகும் நிலை மற்றும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம், தொழிலாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி, சுமூக நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.