/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பதிவாளர் அலுவலகங்களில் ரூ.1.31 லட்சம் பறிமுதல்
/
பதிவாளர் அலுவலகங்களில் ரூ.1.31 லட்சம் பறிமுதல்
ADDED : அக் 22, 2024 11:11 PM
வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சார் -- பதிவாளர் அலுவலகத்தில், சார்-பதிவாளராக பாலாஜி என்பவர் பணிபுரிகிறார். இங்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர். இரவு, 11:00 மணி வரை சோதனை நடத்தப்பட்டது.
அலுவலகத்தில் கணக்கில் வராத, 79 ஆயிரத்து, 100 ரூபாயை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், சார்-பதிவாளராக ரமேஷ் என்பவர் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை பணி முடியும் நேரத்தில், 6:00 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு, 12:00 மணி வரை நடந்த சோதனையில், கணக்கில் வராத 52,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இரு இடங்களில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 1.31 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.