/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
புளிய மரத்தில் கார் மோதி 2 பேர் பலி; 3 பேர் காயம்
/
புளிய மரத்தில் கார் மோதி 2 பேர் பலி; 3 பேர் காயம்
ADDED : மே 20, 2025 01:18 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் ராம்கி, 32, தண்டராம்பட்டு கணேஷ் பெருமாள், 33, திருவண்ணாமலை நவாஸ், 26. அல்லிகொண்டாப்பட்டு சுமித், 31, திருப்பத்துார் திருப்பதி, 27, ஆகியோர், திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டியில் உள்ள குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி, சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள்.
இவர்கள், அங்கேயே தங்கியிருந்த நிலையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சென்று விட்டு, மீண்டும் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, 'மாருதி எர்டிகா' காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். திருப்பதி காரை ஓட்டினார்.
திருவண்ணாமலை - திருக்கோவிலுார் சாலையில் கச்சிராப்பட்டு கிராமம் அருகே சென்றபோது, நிலை தடுமாறிய கார், சாலையோர புளிய மரத்தில் மோதியதில், ராம்கி, திருப்பதி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மற்றவர்கள் படுகாயமடைந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தச்சம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.