/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அரசு பஸ் - மினி லாரி மோதல் டிரைவர் உட்பட 3 பேர் பலி
/
அரசு பஸ் - மினி லாரி மோதல் டிரைவர் உட்பட 3 பேர் பலி
அரசு பஸ் - மினி லாரி மோதல் டிரைவர் உட்பட 3 பேர் பலி
அரசு பஸ் - மினி லாரி மோதல் டிரைவர் உட்பட 3 பேர் பலி
ADDED : செப் 14, 2025 03:39 AM
செங்கம்:செங்கம் அருகே அரசு பஸ்சும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதியதில், மூன்று பேர் பலியாகினர்.
திருவண்ணாமலையிலிருந்து பெங்களூருவுக்கு பூ ஏற்றிச் சென்ற மினி லாரி, நேற்று காலை, 9:30 மணி அளவில், செங்கம் அடுத்த மண்மலை கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது, பெங்களூருலிருந்து, திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ், மினி லாரி மீது நேருக்கு நேர் மோதியதில், மினி லாரி டிரைவர் மணி, 27, சம்பவ இடத்திலேயே பலியானார்.
மினி லாரியில் பயணம் செய்த அதன் உரிமையாளர் ஆறுமுகம், 42, உறவினர் அசோக், 26, ஆகியோர் படுகாயமடைந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை இருவரும் உயிரிழந்தனர்.
செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.