sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

3,000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டெடுப்பு

/

3,000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டெடுப்பு

3,000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டெடுப்பு

3,000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டெடுப்பு


ADDED : நவ 11, 2025 11:36 PM

Google News

ADDED : நவ 11, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம்,- செ.அகரம் கிராம வனப்பகுதியில் பறவை ஆர்வலர் சிவக்குமார் தகவலின் படி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த மதன்மோகன், பழனிசாமி, பாலமுருகன், ஸ்ரீதர், பாரதிராஜா ஆகியோர் கொண்ட வரலாற்று ஆய்வாளர்கள் குழு, இரு இடங்களில் பாறை ஓவியங்களை கண்டறிந்தனர்.

மனித உருவம் பாலமுருகன் கூறிய தாவது:

பெரும்பாக்கம் கிராமத்தை ஒட்டிய தரைக்காடு சிறியமலை பகுதியில், கோவக்கல் என்ற பாறை முகப்பில் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் முன்பகுதியில், மனித உருவம் சதுரங்களை கொண்டு வரையப்பட்டுள்ளது.

கை மடக்கிய நிலையில், ஒரு மனிதன் காட்டப்பட்டுள்ளான். மற்றொரு ஓவியம், மனிதன், பல்லி போன்ற உருவம் வரையப்பட்டுள்ளன.

மற்றொன்றில், பன்றி ஆக்ரோஷமாக சண்டைக்கு விரைவது போல உள்ளது. அதன் எதிரே மனித உருவம் உள்ளது.

இவை, 2 அடி நீளம், ஒரு அடி அகலத்தில் உள்ளன. இவை, தென்னை ஓலை போன்ற பொருட்களில் அலங்கரித்த பிரபை போன்ற அல்லது பாடையின் தோற்றத்தை ஒத்துள்ளது.

இரு பக்கங்களிலும், மடிந்து தொங்கும் ஓலைகள் தெளிவாக தெரிகின்றன.

வெண்சாந்து நிறத்தில் உள்ள இவை, 3,000 ஆண்டு பழமையான பெருங்கற்கால பண்பாட்டின் தடயம். அக்காலத்தில், இப்பகுதியில் வாழ்ந்த தொல்குடியின் ஒரு பண்பாட்டு காட்சியாக உள்ளது.

மற்றொரு இடமான பறம்பு பாறையில், செஞ்சாந்து நிற ஓவியங்கள், 5 அடி அகலம், 3 அடி உயரம் கொண்ட பெரிய விலங்கின் உருவத்தின், ஒரு சில பகுதிகள் தெளிவாகவும், மற்ற பகுதிகள் காலப்போக்கில் அழிந்த நிலையிலும் உள்ளன.

புதிய கற்காலம் இ வை பெரிய பன்றியின் உருவம் போன்று காணப்படுகிறது. வால், உடல் பகுதி தெளிவாக தெரிகின்றன.

அதன் எதிரே, சித்திர வேலைப்பாடான தீ மூட்டும் ஓவியம் போன்றும், அதன் அருகில் ஒருவன் மகிழ்ச்சியை கொண்டாடும் நிலையில் இரு ப்பது போன்றும் உள்ளது. இந்த ஓவியம், 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

திருவண்ணாமலைக்கு மிக அருகில் கிடைத்த மிகவும் தொன்மையான பாறை ஓவியங்கள், திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில், புதிய கற்காலத்தில் இருந்தே மக்கள் வாழ்ந்த பகுதி என்றும், ஓவியங்கள் வேட்டை சமூகத்தின் வாழ்வி யலையும், பண் பாட்டையும் குறிக்கிறது.

திருவண்ணாமலை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற இந்த பாறை ஓவியங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

அதே போல, விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், நங்கியானந்தல் கிராமத்தில் கள ஆய்வு செய்ததில், கி.பி., 12ம் நுாற்றாண்டை சேர்ந்த விஷ்ணு துர்கை மற்றும் நடுகல் சிற்பம் இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.






      Dinamalar
      Follow us