/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மின்வேலியில் 2 பேர் பலி உடல்கள் கிணற்றில் வீச்சு
/
மின்வேலியில் 2 பேர் பலி உடல்கள் கிணற்றில் வீச்சு
மின்வேலியில் 2 பேர் பலி உடல்கள் கிணற்றில் வீச்சு
மின்வேலியில் 2 பேர் பலி உடல்கள் கிணற்றில் வீச்சு
ADDED : நவ 13, 2025 11:24 PM
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பம் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சாமுண்டி, 27, அருண்குமார், 17, ஹரிஷ், 20, சிலம்பு, 25. நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் முயல்வேட்டைக்கு சென்றனர்.
இதில், ஹரிஷ், சிலம்பு வீடு திரும்பினர். சாமுண்டி, அருண்குமார் தொடர்ந்து வேட்டையில் ஈடுபட, அப்பகுதியில் உள்ள பாஷா, 40, என்பவரது விவசாய நிலத்தை கடந்து சென்ற போது மின்வேலியில் சிக்கி பலியாகினர்.
நேற்று காலை, பாஷா, பார்த்தபோது, மின்வேலியில் சிக்கி சாமுண்டி, அருண்குமார் பலியாகி கிடந்தனர். பின், அருகே சேட்டு என்பவரது விவசாய கிணற்றில் சடலங்களை வீசி சென்றார்.
வேட்டைக்கு சென்ற சாமுண்டியும், அருண்குமாரும் வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடி சென்றபோது, கிணற்றில் சடலமாக இருப்பதை கண்டு செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், பாஷா நிலத்தில் மின்வேலியில் சிக்கி பலியானதும், சடலத்தை பாஷா, கிணற்றில் வீசியதும் தெரிய வந்தது. பாஷாவை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

