/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
உயர் மின்னழுத்த கம்பி விழுந்து வீடுகளில் பொருட்கள் சேதம்
/
உயர் மின்னழுத்த கம்பி விழுந்து வீடுகளில் பொருட்கள் சேதம்
உயர் மின்னழுத்த கம்பி விழுந்து வீடுகளில் பொருட்கள் சேதம்
உயர் மின்னழுத்த கம்பி விழுந்து வீடுகளில் பொருட்கள் சேதம்
ADDED : நவ 16, 2025 01:52 AM
செய்யாறு: உயர் மின்னழுத்த கம்பி அறுந்து, 50 வீடுகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகின.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அப்துல்லபுரத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, நேற்று முன்தினம் இரவு, 11 கே.வி., திறன் கொண்ட உயர் மின்னழுத்த கம்பி ஒன்று திடீரென அறுந்து, வீடுகளுக்கு செல்லும் 230 வோல்ட் மின் இணைப்பு கம்பியில் பட்டது.
இதனால், அப்பகுதியிலுள்ள வீடுகளில் அதிகழுத்த மின்சாரம் பாய்ந்து, வீட்டு உபயோக பொருட்கள் வெடித்து சிதறியதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி சேதமாகின. காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
உயர் மின் அழுத்த கம்பி, மூன்றாவது முறையாக இப்பகுதியில் அறுந்து விழுந்துள்ளது என்றும், இப்பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி வழித்தடத்தை மாற்றியமைக்கவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

