/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மர்ம விலங்கு கடித்து 35 ஆடுகள் பலி
/
மர்ம விலங்கு கடித்து 35 ஆடுகள் பலி
ADDED : பிப் 12, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஏந்தும்வாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை, 45; கூலித்தொழிலாளி. இவர், புலவன்பாடி - களம்பூர் சாலையில் ஆட்டு கொட்டகை அமைத்து, 70 செம்மறி ஆடுகள் வளர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று, மீண்டும் கொட்டகையில் அடைத்து வைத்து, வீட்டிற்கு துாங்க சென்றார்.
நேற்று காலை, மீண்டும் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டி செல்ல, பட்டிக்கு சென்று பார்த்த போது, 35 ஆடுகளை அடையாளம் தெரியாத விலங்கு கடித்து குதறியதில் பலியாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆரணி வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.