/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலை தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை

ADDED : டிச 29, 2024 08:40 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தனியார் விடுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், சூரியலிங்கம் அருகில் 'டிவைன் பார்ம் ஹவுஸ்' என்ற தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த, ஸ்ரீ மகா காலவியாசர், 55, ருக்மணி பிரியா, 50, இவர்களது மகள் ஜலந்தரி, 20, மகன் முகுந்த் ஆகாஷ் குமார் 16, ஆகியோர் அறை எடுத்து தங்கினர்.
நேற்று காலை நீண்ட நேரமாக அறைக்கதவு திறக்கப்படாததால், திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில், 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்-டது
தெரியவந்தது போலீசார் அறையை சோதனை செய்தபோது, ஒரு வீடியோ பதிவு மற்றும் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், 'நாங்கள் ஆன்மீக தேடலில் இருந்ததாகவும், ஆன்மீகப் பணி தற்-போது முடிந்து விட்டது. இறைவன் எங்களை அழைத்துள்ளார். அதற்காக நாங்கள் இறைவனடி செல்கிறோம்' என எழுதப்பட்டு இருந்தது.
சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.