/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
4 சவரன் நகைக்காக இளம்பெண் கொலை ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் கைது
/
4 சவரன் நகைக்காக இளம்பெண் கொலை ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் கைது
4 சவரன் நகைக்காக இளம்பெண் கொலை ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் கைது
4 சவரன் நகைக்காக இளம்பெண் கொலை ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் கைது
ADDED : நவ 09, 2025 03:09 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அம்சா, 29. இவரது ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, அக்., 15ம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அவ்வழியாக கீழ்பென்னாத்துாரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காந்தி, 25, கழிக்குளம் கிராமத்தை சேர்ந்த நேத்ரா, 30, ஆகியோர் ஆட்டோவில் வந்தனர். அம்சாவை பார்த்து, ஆட்டோவில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் விடுவதாக கூறி அழைத்துச் சென்றனர்.
வழியில், வேங்கிக்கால் பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று, அம்சாவை கொலை செய்து, அவர் அணிந்திருந்த, 4 சவரன் நகையை, காந்தி, நேத்ரா பறித்துக் கொண்டனர். சடலத்தை மூட்டை கட்டி, திருவண்ணாமலை பைபாஸ் சாலையிலுள்ள கீழ்நாத் துார் ஏரியில் வீசினர்.
குழந்தையை சோமாஸ்பாடி கிராமம் அருகே விட்டு சென்றனர். குழந்தை தனியாக இருப்பதை பார்த்த பொதுமக்கள், குழந்தையை மீட்டு, போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து, குழந்தையை அவரது தந்தையிடம் ஒப்படைத்து, அம்சாவை தேடினர்.
நேற்று, பைபாஸ் சாலையிலுள்ள ஏரி நீர் செல்லும் கால்வாய் ஓரமுள்ள வயலில், மூட்டையில் சடலம் கிடந்துள்ளது. சடலத்தை மீட்ட கீழ்பென்னாத்துார் போலீசார், காந்தி, நேத்ராவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

