/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பெட்ரோல் குண்டு வீச்சில் பெண் குழந்தை படுகாயம்
/
பெட்ரோல் குண்டு வீச்சில் பெண் குழந்தை படுகாயம்
ADDED : மே 16, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சந்தவாசல் : திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் காங்கிரானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராசையா. இவரது மனைவி திவ்யா. இவர்கள் மகள் ஆஷிக், 3. வீட்டில் அனைவரும் துாங்கிக் கொண்டிருந்தபோது, நேற்று அதிகாலை, 2:00 மணியளவில் ராசையா வீட்டில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
தீப்பொறி விழுந்ததில், ஆஷிக் பலத்த காயமடைந்தார். ராசையா குழந்தையை மீட்டு வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். சந்தவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.