/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
விவசாயியின் தொடையில் பாய்ந்த துப்பாக்கி தோட்டா
/
விவசாயியின் தொடையில் பாய்ந்த துப்பாக்கி தோட்டா
ADDED : பிப் 10, 2024 01:07 AM
வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த பருவதம்பூண்டியை சேர்ந்தவர் பெருமாள், 35, விவசாயி. பக்கத்து கிராமமான சோலையருகாவூரில், ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார்.
கொக்குகள் பயிரை சேதம் செய்ததால், நேற்று முன்தினம் மாலை, நாட்டு துப்பாக்கியில் தோட்டா நிரப்பி, அவற்றை சுட முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது தொடையில் தோட்டா பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி பயன்படுத்துவதும் குற்றம் என்பதால், அதை பயன்படுத்தி, வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுத்த முயன்றதாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தேசூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, துப்பாக்கியை அவர் துடைத்து கொண்டிருந்த போது, அதிலிருந்து தோட்டா பாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.