/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அரசின் அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு போட்ட தி.மு.க., பிரமுகர்
/
அரசின் அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு போட்ட தி.மு.க., பிரமுகர்
அரசின் அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு போட்ட தி.மு.க., பிரமுகர்
அரசின் அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு போட்ட தி.மு.க., பிரமுகர்
ADDED : ஜன 25, 2024 01:06 PM
திருப்பத்துார் : திருப்பத்துார் அருகே, அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி மையத்திற்கு, தி.மு.க., பிரமுகர் உரிமை கொண்டாடி குழந்தைகளை வெளியேற்றி, வெயிலில் நிற்க வைத்து, பூட்டு போட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பஞ்., கம்மியம்பட்டு புதுாரிலுள்ள, அங்கன்வாடி மையம், கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இங்கு, 22 குழந்தைகள் படிக்கின்றனர். அப்பகுதியை சேர்ந்த, தி.மு.க., கிளை செயலாளர் பூபதி, 47, என்பவர், இந்த இடம், எங்களது உறவினர்களுக்கு சொந்தமான இடம் எனக்கூறி நேற்று, அங்கன்வாடி மையத்தில் அமர்ந்திருந்து குழந்தைகளை வெளியேற்றிவிட்டு, பூட்டு போட்டார். இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியே வெயிலில் குழந்தைகள் நின்றிருந்தனர்.ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தியதில், கடந்த, 1980ம் ஆண்டு, அந்த இடம் அரசுக்கு எழுதி கொடுக்கப்பட்டு விட்டது என்று தெரியவந்தது. இதையடுத்து அங்கன்வாடி மையத்தை திறந்து, குழந்தைகளை உள்ளே அமர வைத்தனர். தி.மு.க., பிரமுகரின் அடாவடி செயல், கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.