/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அ.தி.மு.க., தேர்தல் பிரசார வாகனம் பூஜை போடப்பட்டு தயாராக நிறுத்திவைப்பு

ADDED : மார் 07, 2024 02:09 AM
திருவண்ணாமலை, திருவண்ணாமலையில், லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக, பயன்படுத்தப்பட உள்ள வாகனம், அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், பூஜை போடப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
திருவண்ணாமலை, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் தண்டராம்பட்டு ராமச்சந்திரன் உள்ளார். இவர் தலைமையில், தேர்தல் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதில் பூத் கமிட்டி அமைத்தல், பிரசார வாகனம் தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
வரும் லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கு, கிராமந்தோறும் சென்று, வேட்பாளர் ஓட்டு கேட்க, பொலிரோ மினி லாரி, பெயின்ட் அடிக்கப்பட்டு கட்சி அலுவலகம் முன், பூஜை போடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா,
எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த போட்டோ, இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளது. இந்த மினி லாரி, மூட்டை ஏற்றி செல்ல, பயன்படுத்தக்கூடிய வாகனம் என்பது குறிப்
பிடத்தக்கது.