/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலையில் சர்வதேச தரத்தில் ஹாக்கி விளையாட்டு மைதானம்; துணை முதல்வர்
/
தி.மலையில் சர்வதேச தரத்தில் ஹாக்கி விளையாட்டு மைதானம்; துணை முதல்வர்
தி.மலையில் சர்வதேச தரத்தில் ஹாக்கி விளையாட்டு மைதானம்; துணை முதல்வர்
தி.மலையில் சர்வதேச தரத்தில் ஹாக்கி விளையாட்டு மைதானம்; துணை முதல்வர்
ADDED : அக் 20, 2024 04:07 AM
திருவண்ணாமலை: ''திருவண்ணாமலையில் சர்வதேச தரத்தில் ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
திருவண்ணாமலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய, 3 மாவட்ட, விளையாட்டு வீரர்களுக்கு, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள், 803 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 78 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கி துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளால், தமிழ்நாடு விளையாட்டில் மாபெரும் இயக்கமாக மாறி வருகிறது. இந்த ஆண்டு, 11 லட்சம் பேர் பங்கேற்றனர். அரசு பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டதன் விளைவாக, 100 விளையாட்டு வீரர்களுக்கு முதல் கட்டமாக வேலை வழங்கப்பட உள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, 6 வீரர்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதில், 4 பேர் பதக்கத்தோடு திரும்பி வந்தனர். அவர்களுக்கு பயற்சி அளிக்க, 7 லட்சம் ரூபாய் ஊக்க தொகை வழங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சில பெண்கள் கிடைக்கவில்லை என நினைக்கின்றனர்.
இதில் உள்ள குறைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் வழங்கப்படும். திருவண்ணாமலையில் சர்வதேச அளவில் ஹாக்கி விளையாட்டு மையதானம் அமைக்கப்படும். இதற்காக முதற்கட்டமாக, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.