/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ஐ.டி.ஐ., படித்து விட்டு கிளினிக் நடத்தியவர் கைது
/
ஐ.டி.ஐ., படித்து விட்டு கிளினிக் நடத்தியவர் கைது
ADDED : அக் 27, 2024 02:00 AM
ஆரணி,:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கொசப்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 53. ஐ.டி.ஐ., படித்த இவர், மருசூர் கிராமத்தில் கிளினிக் வைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. ஆரணி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் நந்தினி தலைமையிலான மருத்துவக் குழுவினர், நேற்று அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது அவர், நோயாளிகளுக்கு, ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. அங்கிருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்து, சீனிவாசனை ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், சீனிவாசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த முல்லை நிம்மியம்பட்டையை சேர்ந்தவர் மஞ்சுநாதன், 50. பிளஸ் 2 படித்த அவர், வீட்டிலேயே கிளினிக் வைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக, வாணியம்பாடி அரசு மருத்துவமனை டாக்டர் தினேஷுக்கு தகவல் கிடைத்தது. அவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், நேற்று அங்கு சோதனை செய்த போது, மஞ்சுநாதன் தப்பியோடினார். ஆலங்காயம் போலீசில் புகார் செய்யப்பட்டது.