/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
'மச்சான்' என்றதால் ஆத்திரம்; வாலிபருக்கு சரமாரி வெட்டு
/
'மச்சான்' என்றதால் ஆத்திரம்; வாலிபருக்கு சரமாரி வெட்டு
'மச்சான்' என்றதால் ஆத்திரம்; வாலிபருக்கு சரமாரி வெட்டு
'மச்சான்' என்றதால் ஆத்திரம்; வாலிபருக்கு சரமாரி வெட்டு
ADDED : செப் 23, 2025 06:33 AM
செய்யாறு; மச்சான் எனக்கூறியதால் வாலிபரை சரமாரியாக கத்தியால் வெட்டிய சிறுவன் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நேதாஜி, 28; செய்யாறு சிப்காட் தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில், மொபைல் போனில் தன் வீட்டின் அருகே பேசி கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக பைக்கில் சென்ற மூன்று பேரை பார்த்து, 'டேய் மச்சான்' என அழைத்ததாக தெரிகிறது. பைக்கை நிறுத்திவிட்டு வந்த அவர்கள் மூன்று பேரும், 'யாரை மச்சான் என அழைக்கிறாய்' எனக்கூறி, கத்தியால் நேதாஜியை வெட்டிவிட்டு தப்பினர்.
நேதாஜியை பெற்றோர் மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிந்து, அதேபகுதியைச் சேர்ந்த செல்வம், 19, பனமுறை கிராமத்தைச் சேர்ந்த இமயவர்மன், 19, மற்றும், 17 வயது சிறுவன் உட்பட மூவரை நேற்று கைது செய்தனர்.