/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலைக்கு பதில் 'அருணாச்சலம்' அரசு பஸ் கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
/
தி.மலைக்கு பதில் 'அருணாச்சலம்' அரசு பஸ் கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
தி.மலைக்கு பதில் 'அருணாச்சலம்' அரசு பஸ் கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
தி.மலைக்கு பதில் 'அருணாச்சலம்' அரசு பஸ் கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 20, 2025 02:59 AM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அரசு பஸ்சில், திருவண்ணாமலைக்கு பதில் 'அருணாச்சலம்' என, எல்.இ.டி., திரையில் வெளியிட்ட அரசு பஸ் கண்டக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருவண்ணாமலைக்கு, ஆந்திரா உட்பட வெளி மாநில பக்தர்கள் வருகை தற்போது அதிகரித்துள்ளது. பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலையை, 'அருணாச்சலம்' என அழைக்கின்றனர்.
அரசு பஸ்கள் சிலவற்றிலும் திருவண்ணாமலை என்பதற்கு பதில் அருணாச்சலம் என பெயர் பலகையும் இடம்பெற்று இருந்தது. இது சமூக வலைதளங்களில் பரவியது. 'திருவண்ணாமலை பெயர் அருணாச்சலம்' என மாறுகிறது என, பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு டெப்போவில் இருந்து, ஜூலை, 15ல் பெங்களூரு சென்ற அரசு பஸ் எல்.இ.டி., திரையில், திருவண்ணாமலை என்பதற்கு பதிலாக அருணாச்சலம் என பெயர் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக புகார் எழுந்தது.
சம்பந்தப்பட்ட பஸ் கண்டக்டரான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விஜயராகவனை சஸ்பெண்ட் செய்து, அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளர் ஜெயசங்கர் உத்தரவிட்டார்.

