/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அருணாசலேஸ்வரர் கோவில் விழா கட்டளைதாரர்களை அனுமதிக்காததால் தர்ணா
/
அருணாசலேஸ்வரர் கோவில் விழா கட்டளைதாரர்களை அனுமதிக்காததால் தர்ணா
அருணாசலேஸ்வரர் கோவில் விழா கட்டளைதாரர்களை அனுமதிக்காததால் தர்ணா
அருணாசலேஸ்வரர் கோவில் விழா கட்டளைதாரர்களை அனுமதிக்காததால் தர்ணா
ADDED : டிச 14, 2024 03:00 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவி-ழாவில், கட்டளைதாரர்களை அனுமதிக்காததால் தர்ணாவில் ஈடு-பட்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா தொடங்கிய காலத்தில், கோவிலுக்கு போதிய வருவாய் இல்லாத நேரத்தில், தீப திருவிழா நடக்கும், 10 நாட்களும் ஒவ்வொரு முறைதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் மூலம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கோவிலுக்கு வருவாய் பெருகிய பிறகும், பழமை மாறாமல் கட்டளைதாரர்கள் மூலம் விழா நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று நடந்த மஹா தீப திருவிழாவில், மாலை மஹா தீபம் ஏற்றும் நிகழ்வை கண்டு வழிபட, கட்டளைதாரர்க-ளான நாட்டுகோட்டை நகரத்தார், 250க்கும் மேற்பட்டோருக்கு கட்டளைதாரர் பாஸ் கோவில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. அதை வைத்து கொண்டு, வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் வழியாக செல்வதற்கு வந்தனர். அப்போது போலீசார், 25 பேரை மட்டும் சிறப்பு வழியாக அனுமதித்து விட்டு, மற்றவர்களை அனுமதிக்காமல் வெளியிலேயே நிற்க வைத்தனர். இதனால், ஆத்திரமடைந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் கட்டளைதாரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால், போலீசார் அவர்களை கடைசி வரை அனுமதிக்கவில்லை. பின்னர், பக்தர்களோடு பக்தர்களாக வரிசையில் நின்று கோவிலினுள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.