/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ரூ.3 கோடி மோசடி: கூட்டுறவு செயலர் கைது
/
ரூ.3 கோடி மோசடி: கூட்டுறவு செயலர் கைது
ADDED : நவ 04, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லுார் மற்றும் கலசப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலராக கிருஷ்ணமூர்த்தி, 55, பணிபுரிந்தார்.
கடந்த மார்ச்சில், கூட்டுறவு துறை அதிகாரிகள் தணிக்கை செய்ததில், 84க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பெயரில், 320 சவரன் நகைக்கடன் வழங்கியதில், கிருஷ்ணமூர்த்தி, 3 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கிருஷ்ணமூர்த்தியை நேற்று கைது செய்தனர்.

