ADDED : டிச 30, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சந்தவாசல்: வேலுார் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த கார் மெக்கானிக் ஸ்ரீதர், 44. இவரது மனைவி சங்கீதா, 40.
இவர்களது மகன் அஜய், 16; மகள் அனுஷ்கா, 14. திருவண்ணாமலைக்கு நான்கு பேரும் நேற்று காலை 8:00 மணியளவில் 'ஹூண்டாய்' காரில் சென்றனர். காரை ஸ்ரீதர் ஓட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த அய்யம்பாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த 'இன்னோவா' காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில், ஸ்ரீதர் சம்பவ இடத்தில் பலியானார்.
மற்ற மூவரும் பலத்த காயம் அடைந்து, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சங்கீதா பலியானார். அஜய், அனுஷ்கா படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கண்ணமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

