/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தேர்ச்சி சதவீதத்தில் தி.மலை மாவட்டம் கடைசி இடம்: அரசு பள்ளியில் சிறப்பு ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை
/
தேர்ச்சி சதவீதத்தில் தி.மலை மாவட்டம் கடைசி இடம்: அரசு பள்ளியில் சிறப்பு ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை
தேர்ச்சி சதவீதத்தில் தி.மலை மாவட்டம் கடைசி இடம்: அரசு பள்ளியில் சிறப்பு ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை
தேர்ச்சி சதவீதத்தில் தி.மலை மாவட்டம் கடைசி இடம்: அரசு பள்ளியில் சிறப்பு ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை
ADDED : மே 07, 2024 07:08 AM
திருவண்ணாமலை : ''தமிழகத்தின் கடைசி இடத்தை, திருவண்ணாமலை மாவட்டம் பிடித்த நிலையில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் நியமித்து பயிற்சி அளிக்கப்படும்,'' என, கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை, 12,724 மாணவர்கள், 13,827 மாணவியர் என, 26,551 பேர் எழுதினர். தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 தேர்ச்சி பட்டியல் வெளியானதில், இந்த மாவட்டத்தில், 11,037 மாணவர்கள், 12,984 மாணவியர் என, 24,021 பேர் தேர்ச்சி பெற்றனர். அதன்படி, 90.47 சதவீத தேர்ச்சி பெற்று, தமிழகத்தின் கடைசி இடமாக, 38வது இடத்தை திருவண்ணாமலை பிடித்தது.
இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம், பிளஸ் 2 தேர்ச்சியில், கடந்தாண்டு, 89.80 சதவீதத்தில் இருந்து, இந்தாண்டு, 0.67 சதவீதம் உயர்ந்து, 90.47 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் நல பள்ளிகள் மூலம், 251 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியதில், 249 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 99.20 சதவீதம். இவர்களுக்கு ஒரு மாதமாக, சிறப்பு ஆசிரியர்கள் நியமித்து தேர்வுக்கு தயாராக அளித்த பயிற்சி நல்ல பலனை கொடுத்துள்ளது.
அதேபோன்று மற்ற அரசு பள்ளிகளிலும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, இந்தாண்டு முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், 6ம் வகுப்பு முதலே, அனைத்து பாடங்களிலும் கவனம் செலுத்த ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில், அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும். இந்தாண்டு முதல் அந்த நடைமுறை பின்பற்றப்படும். தேர்ச்சி பெறாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து ஊக்குவித்தால், இடைநிற்றல் இல்லாத நிலை உருவாக்க முடியும். அவர்கள் உயர்கல்வி படிக்க வழி கிடைக்கும். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், 12,041 பேர் தேர்வு எழுதினர். இதில், 11,444 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 92.28 சதவீதம். அதேபோல் திருப்பத்துார் மாவட்டத்தில், 12,303 பேர் தேர்வு எழுதினர். அதில், 11,361 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 92.34 சதவீதம். வேலுார் மாவட்டத்தில், 13,535 பேர் எழுதினர். இதில், 12,524 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 92.53 சதவீதம்.