/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மாமியார் கழுத்தை நெரித்து கொன்ற மருமகளுக்கு கம்பி
/
மாமியார் கழுத்தை நெரித்து கொன்ற மருமகளுக்கு கம்பி
ADDED : ஆக 12, 2025 03:49 AM
வேட்டவலம்: குடும்ப தகராறில், மாமியாரை கழுத்து நெரித்து கொலை செய்த மருமகள் போலீசில் சரணடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அண்ணா நகரை சேர்ந்தவர் பழனிவேல், 50; அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி தேவி, 36. இவர்களுக்கு, இரு மகள், ஒரு மகன். மகள்கள் அரசு பெண்கள் பள்ளியிலும், மகன் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியிலும் படிக்கின்றனர். பழனிவேலின் தாய் அய்யம்மாள், 79. இவர் மகன் வீட்டில் வசித்தார்.
தேவி, அய்யம்மாள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல ஏற்பட்ட தகராறுக்கு பின்னர், அய்யம்மாள் வீட்டிலுள்ள ஓர் அறையில் துாங்கினார். ஆத்திரம் தீராத தேவி, நள்ளிரவு, 1:00 மணிக்கு அய்யம்மாள் மீது அமர்ந்து, அவரது கழுத்தை நெரித்ததில் அவர் உயிரிழந்தார். அன்று நள்ளிரவே, வேட்டவலம் போலீஸ் ஸ்டேஷன் சென்று அவர் சரணடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.