/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் டிரைவர் தற்கொலை; 3 பேர் கைது
/
கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் டிரைவர் தற்கொலை; 3 பேர் கைது
கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் டிரைவர் தற்கொலை; 3 பேர் கைது
கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் டிரைவர் தற்கொலை; 3 பேர் கைது
ADDED : பிப் 13, 2024 04:18 PM
ஆரணி : ஆரணி அருகே, 2 லட்சம் ரூபாய் கடனுக்கு, 10 லட்சம் ரூபாய் கந்து வட்டி கேட்டு, கார் டிரைவரை தாக்கியதால், மனமுடைந்த அவர் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ரகுநாதபுரத்தை சேர்ந்தவர் பைக் மெக்கானிக் சின்னசாமி, 42; இவர் மனைவி வேலுமணி, 38. அதே பகுதியை சேர்ந்தவர் கார் டிரைவர் விஜயகாந்த், 39; இவர் மனைவி லலிதா, 30. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், வேலுமணியிடம், 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். அதை திருப்பி கொடுக்க தாமதமானதால், 2 லட்சம் ரூபாய்க்கு, 10 லட்சம் ரூபாய் தர வேண்டுமென, லலிதா மற்றும் விஜயகாந்தை, வேலுமணியின் கணவர் சின்னசாமி மிரட்டி வந்தார்.
சில நாட்களாக கடன் தொகையில் சிறுக சிறுக வட்டி, அசல் தொகை செலுத்தி வந்த நிலையில், கடந்த, 8 ம் தேதி, சின்னசாமி மற்றும் அவரது நண்பர்களான, சத்தியமூர்த்தி, 40, நந்தகோபால், 42, ஆகியோர், விஜயகாந்த்தை, முழு பணத்தையும் உடனடியாக செலுத்தக்கூறி தாக்கினர். இதில் மனமுடைந்த விஜயகாந்த், கடந்த, 10 ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆரணி தாலுகா போலீசார், நேற்று முன்தினம் இரவு, சின்னசாமி, சத்தியமூர்த்தி மற்றும் நந்தகோபால் ஆகிய மூவரையும், கைது செய்து விசாரிக்கின்றனர்.