/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
வில்லனாக மாறிய மாஜி காதலன் இளம்பெண் புகாரால் தலைமறைவு
/
வில்லனாக மாறிய மாஜி காதலன் இளம்பெண் புகாரால் தலைமறைவு
வில்லனாக மாறிய மாஜி காதலன் இளம்பெண் புகாரால் தலைமறைவு
வில்லனாக மாறிய மாஜி காதலன் இளம்பெண் புகாரால் தலைமறைவு
ADDED : ஏப் 15, 2025 06:29 AM
செய்யாறு: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திர மேரூரை அடுத்த இளநகர் கிரா-மத்தை சேர்ந்தவர் பாலாஜி, 23; திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்த, 22, வயது பட்டதாரி பெண்ணுடன், சென்னை ஒரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது இருவரும் காதலித்துள்ளனர். பாலாஜி ஏற்கனவே திரு-மணமானவர் என்ற விஷயம் தெரியவே, அவருடன் பழகுவதை தவிர்த்தார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு கடந்த, 6ம் தேதி நிச்-சயதார்த்தம் நடந்தது.
இதையறிந்த பாலாஜி மறுநாள், மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று, அந்த பெண்ணுடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களை காட்டி-யுள்ளார். மேலும் பெண்ணுக்கு போன் செய்து, 'உன் திரும-ணத்தை நிறுத்தி விட்டேன். ஒரு நாள் என்னுடன் இருந்து விட்டு போ; இல்லாவிட்டால் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவேன்' என்று போனில் மிரட்டியுள்ளார். அத்தோடு நில்-லாமல் பெண் வீட்டுக்கும் சென்று, 'என்னை மீறி நீ எப்படி வேறு திருமணம் செய்து கொள்கிறாய்' என கூறியுள்ளார். அப்பெண் அளித்த புகார் படி, செய்யாறு மகளிர் போலீசார், தலைமறைவான பாலாஜியை தேடி வருகின்றனர்.