/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மகளிடம் பாலியல் சில்மிஷம் 'போக்சோ'வில் தந்தை கைது
/
மகளிடம் பாலியல் சில்மிஷம் 'போக்சோ'வில் தந்தை கைது
ADDED : ஏப் 05, 2025 03:03 AM
செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 49 வயது நெசவு தொழிலாளிக்கு, 15 வயதில், 10ம் வகுப்பு படிக்கும் மகளும், 11 வயதில், 6ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
மகளுக்கு தந்தை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். தகவலறிந்த தாய், கணவனை தட்டிக் கேட்டதில் தகராறு ஏற்பட்டு, சில நாட்களுக்கு முன் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தாய் இறந்த துக்கத்தில் இருந்த மாணவியை, தந்தை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார். தாயின் ஈமச்சடங்கு இரு நாட்களுக்கு முன் நடந்தது. அப்போது உறவினர்கள் வந்திருந்தனர்.
அவர்களிடம் மாணவி, தந்தை பாலியல் தொல்லை கொடுப்பதைக் கூறி கதறி அழுதார். உறவினர்கள், செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். காமுக தந்தையை, போக்சோவில் போலீசார் நேற்று கைது செய்தனர்.