/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ரூ.2.30 லட்சம் வரி மோசடி: பஞ்., செயலர் 'சஸ்பெண்ட்'
/
ரூ.2.30 லட்சம் வரி மோசடி: பஞ்., செயலர் 'சஸ்பெண்ட்'
ரூ.2.30 லட்சம் வரி மோசடி: பஞ்., செயலர் 'சஸ்பெண்ட்'
ரூ.2.30 லட்சம் வரி மோசடி: பஞ்., செயலர் 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 28, 2025 11:33 PM
போளூர்: போளூர் அருகே, 2.30 லட்சம் ரூபாய் வரி வசூல் மோசடியில் ஈடுபட்ட பஞ்., செயலரை, 'சஸ்பெண்ட்' செய்து, பி.டி.ஓ., உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த மாம்பட்டு பஞ்., செயலராக சேகர், 48, என்பவர் பணிபுரிந்து வந்த நிலையில், அக்டோபரில், முருகாபாடி பஞ்.,க்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், 2024 - 25ம் ஆண்டிற்கான பஞ்., கணக்கை தணிக்கை அதிகாரி பிரதீப் பாபு ஆய்வு செய்ததில், சொத்து வரி உட்பட வரி இனங்களில், 4 லட்சத்து, 48,948 ரூபாய் வசூல் செய்யப்பட்டு, அதில், 2 லட்சத்து, 18,900 ரூபாய் மட்டும் அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மீதமுள்ள, 2 லட்சத்து, 30,048 ரூபாயை செலுத்துவதில், பஞ்., செயலர் சேகர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இத்தொகையை செலுத்த அதிகாரிகள் உத்தரவிட்டும், இதுவரை செலுத்தாததால், சேகரை 'சஸ்பெண்ட்' செய்து, போளூர் பி.டி.ஓ., ரபியுல்லா உத்தரவிட்டார்.

