/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கூவி கூவி கஞ்சா விற்பனை தி.மலையில் கத்திக்குத்து
/
கூவி கூவி கஞ்சா விற்பனை தி.மலையில் கத்திக்குத்து
ADDED : அக் 12, 2024 01:01 AM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள், கிரிவலப்பாதையில் பிளாட்பாரங்களில், சாமியார்கள் என்ற போர்வையில் தங்கி உலா வருபவர்களுக்கு உணவு, உடை, பணம், உள்ளிட்டவற்றை வழங்கி செல்கின்றனர். இவ்வாறு, கிரிவலப்பாதையில், 5,000த்திற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனார், மது, கஞ்சா போதையிலேயே எப்போதும் சுற்றி திரிவது வழக்கம்.
கஞ்சாவை மறைமுகமாக விற்பனை செய்து வந்த அவர்களில் சிலர், நேற்று முன்தினம் நள்ளிரவு, அருணாசலேஸ்வரர் கோவில், ராஜகோபுரம் எதிரே, சக சாமியார்களுக்கு கூவி கூவி விற்பனை செய்தனர். ஒரு சில நபர்கள் வாங்க மறுத்தனர். அவர்களை, இந்த 'போர்வை' ஆசாமிகள் கத்தியால் வெட்டினர். இதில், பலருக்கு காயம் ஏற்பட்டது.
திருவண்ணாமலை டவுன் போலீசார், கஞ்சா விற்பனை செய்து, தகராறில் ஈடுபட்ட சண்முகம், 67, மகேஷ், 25, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.