/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அரசு பணியை ராஜினாமா செய்து பா.ஜ.,வில் இணைந்த ஹெச்.எம்.,
/
அரசு பணியை ராஜினாமா செய்து பா.ஜ.,வில் இணைந்த ஹெச்.எம்.,
அரசு பணியை ராஜினாமா செய்து பா.ஜ.,வில் இணைந்த ஹெச்.எம்.,
அரசு பணியை ராஜினாமா செய்து பா.ஜ.,வில் இணைந்த ஹெச்.எம்.,
ADDED : ஜன 20, 2024 12:58 AM

ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சங்கர், 55. இவர், தேவிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக மறைமுகமாக, பா.ஜ.,வில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை, 31ம் தேதி தன் தலைமை ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ., கட்சி வளர்ப்பில் முழு நேரமும் பணியாற்றி வருகிறார். தற்போது இவர், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு, திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவராக பணிபுரிந்து வருகிறார்.
ஜவுளி வியாபாரியான இவரது தந்தை வரதன், தீவிர, தி.மு.க., விசுவாசி. இவரது அண்ணன் சிவா, ஏற்கனவே, சுயேட்சை கவுன்சிலராக, ஆரணி நகராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மற்றொரு அண்ணன் ரவி, 59, தற்போது, ஆரணி நகராட்சி, 15 வது வார்டு, தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். தீவிர, தி.மு.க., குடும்பத்திலிருந்த ஒருவர், அதிலிருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்து, தி.மு.க.,வுக்கு எதிராக, கட்சிப்பணியில் ஈடுபட்டு வருவது, பா.ஜ., தொண்டர்களிடையே உத்வேதகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சங்கர் கூறுகையில், ''ஊழலற்ற, தேசியப்பற்று கொண்ட, இந்துத்துவா கட்சியான, பா.ஜ.,வின் மீதான ஈர்ப்பால், தலைமை ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து கட்சிப்பணியை முழு நேரமாக செய்து வருகிறேன். மாநில தலைவர் அண்ணாமலை, ஐ.பி.எஸ்., பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ., வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார். அதை ரோல்மாடாக எடுத்துக்கொண்டு, கட்சி வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ளேன். தொடர்ந்து ஈடுபடுவேன்,'' என்றார்.