/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கர்நாடகா பஸ் மோதி இருவர் பலி பொதுமக்கள் கோபத்தால் சூறை
/
கர்நாடகா பஸ் மோதி இருவர் பலி பொதுமக்கள் கோபத்தால் சூறை
கர்நாடகா பஸ் மோதி இருவர் பலி பொதுமக்கள் கோபத்தால் சூறை
கர்நாடகா பஸ் மோதி இருவர் பலி பொதுமக்கள் கோபத்தால் சூறை
ADDED : பிப் 28, 2024 12:45 AM
செங்கம்:திருச்சியிலிருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த, 'ராயல்' என்ற ஆம்னி பஸ், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியில் சென்றபோது, டயர் பஞ்சரானது.
பஸ் டிரைவர் அன்பு, 52, அப்பகுதியில், பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வரும் பிரசாந்த், 25, என்பவரிடம் சென்று, பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தார். அவர்கள் நிற்பதை கவனிக்காமல், பெங்களூரிலிருந்து, திருவண்ணாமலை நோக்கி சென்ற கர்நாடகா அரசு பஸ் இருவர் மீதும் மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அதிர்ச்சியடைந்த கர்நாடகா அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ்சை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கர்நாடகா அரசு பஸ்சை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
செங்கம் போலீசார், கர்நாடக அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை தேடி வருகின்றனர்.