/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கார்த்திகை தீப திருவிழா 'நெய் குட காணிக்கை' விற்பனை தொடக்கம்
/
கார்த்திகை தீப திருவிழா 'நெய் குட காணிக்கை' விற்பனை தொடக்கம்
கார்த்திகை தீப திருவிழா 'நெய் குட காணிக்கை' விற்பனை தொடக்கம்
கார்த்திகை தீப திருவிழா 'நெய் குட காணிக்கை' விற்பனை தொடக்கம்
ADDED : நவ 05, 2024 06:41 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, 'நெய் குட காணிக்கை' விற்பனையை, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடக்கி வைத்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் டிச., 1 ல், நகர காவல் தெய்வமான துர்க்கை-யம்மன் உற்சவம், டிச., 4 ல் கொடியேற்றத்துடன் தொடங்கி, டிச., 13 ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். இவ்-வாறு மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் நெய்யை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்த, 'நெய் குட காணிக்கை' விற்பனையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று கோவிலில் தொடங்கி வைத்தார்.
நெய் குட காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள், ஆன்லைன் மூலமாகவோ, கோவிலில் திறக்கப்பட்டுள்ள விற்பனை கவுன்ட-ரிலோ பணமாக செலுத்தலாம். ஒரு கிலோ நெய் காணிக்கை செலுத்த விரும்புவோர், 250 ரூபாய், அரை கிலோ நெய், 150 ரூபாய், கால் கிலோ நெய், 80 ரூபாய் காணிக்கையாக செலுத்-தலாம். மஹா தீபத்தன்று மலை மீது ஏற, 2,000 பேர் அனுமதிக்-கப்படுவர். அவர்களுக்கு உடல் மருத்துவ பரிசோதனை செய்த பின், அனுமதிக்கப்பட உள்ளனர்.