/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
காவிரியாற்றில் மூழ்கி கூலி தொழிலாளி சாவு
/
காவிரியாற்றில் மூழ்கி கூலி தொழிலாளி சாவு
ADDED : செப் 24, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: சேலம், மன்னார்பாளையம் பிரிவு, சொட்டையன் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் கூலி தொழிலாளி கண்ணன், 27. மனைவி தனலட்சுமி. தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளனர். வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்த கண்ணன் கடந்த, 21ல் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் திரும்பவில்லை. நேற்று மதியம் கண்ணன் சடலம் மேட்டூர் காவிரியாற்றில் மிதந்தது.
அதனை மேட்டூர் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். அதில், அவர் சேலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தந்தை ரங்கநாதன் கொடுத்த புகார்படி, மேட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.